மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவர் நீதிமன்றம் திறப்புவிழா

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவர் நீதிமன்றம் திறக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி அடைந்துள்ள அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, புதிதாக 19 நீதிமன்றங்கள் திறக்கப்படும் என சட்டசபையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் கடலாடி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, புதிதாக கட்டப்பட்ட மாவட்ட உரிமையியல் மற்றும் நீதிதுறை நடுவர் நீதிமன்றத்தினை மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். தலைமை நீதிபதி சிவபிரகாசம், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், காவல்துறை டி.ஐ.ஜி, காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய நீதிமன்றம் அமைத்து தந்த தமிழக அரசுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version