சேலம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ராமன் திடீர் என ஆய்வு மேற்கொண்டார்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சேலம் அரசு மருத்துவமனையில் தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் நாள்தோறும் ஏராளமானோர் புறநோயாளியாகவும், உள்நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ராமன் திடீர் ஆய்வுமேற்கொண்டார். அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் காய்ச்சலுக்கான சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று பார்வையிட்ட அவர், அங்குள்ள நோயாளிகளிடம் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தார்.