திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வெள்ளக்கோவில் பகுதிகளில் நடந்து வரும் வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி ஆய்வு செய்தார்.
காங்கேயம், வெள்ளக்கோவில் பகுதிகளில் உள்ள கிளை வாய்க்கால்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 1 கோடியே 14 லட்ச ரூபாய் செலவில் நடைபெற்று வரும் பணிகளைத் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். வாய்க்காலின் இரு புறங்களிலும் சுவர் அமைத்தல், செடிகள் மற்றும் மண் படிமங்கள் அகற்றுதல், மதகுகள் பொருத்துதல், பக்கவாட்டுச் சுவர்கள் அமைத்தல், சிதிலமடைந்த இடங்களைச் சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அதிகாரிகளுடன் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.