நாமக்கல்லில் ஏரியை தூர் வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாமக்கல்லில் ஏரியை தூர் வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆசிய மரியம் நேரில் பார்வையிட்டார்.

ராசிபுரம் ஏரியில் மழை நீரை சேமிக்கவும், கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து ஏரியில் விடுவதற்காகவும் தூர்வாருதல் மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சுற்றுச்சூழல் பராமரிப்பு நிதியில் இருந்து 3 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளின் நிலைகுறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆசிய மரியம் ஆய்வு செய்தார். ஊழியர்களுடன் பணிகளை விரைவில் முடிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து வெண்ணந்தூர், மின்னக்கல், அலவாய்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Exit mobile version