சாத்தூரில் எச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு இலவச வீட்டுமனை மற்றும் பசுமை வீடு வழங்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சாத்தூரை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு தவறுதலாக எச்.ஐ.வி. தொற்று இரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. மதுரை அரசு மருத்துவமனையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விருதுநகர் ஆட்சியர் சிவஞானம், நியூஸ் ஜெ. செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய சிகிச்சை சிறந்த முறையில் அளிக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும் அப்பெண்ணிற்கு இலவச வீட்டு மனைப்பட்டாவும், அதில் பசுமை வீடும் கட்டித்தரப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.