புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார்.
தமிழகத்தில் நீர் ஆதாரங்களை சீரமைத்து அதன் மூலம் மழைநீரை சேமித்து, நிலத்தடி நீரை மேம்படுத்தவும் நீர் பயன்பாட்டை முறையாக ஒழுங்குபடுத்தவும் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை, மாவட்ட ஆட்சித் தலைவர் உமாமகேஸ்வரி, விவசாயிகள் உடன் நேரில் சென்று பார்வையிட்டார். திருமயம் வட்டம் மல்லாங்குடி, புதுக்குளம், பரணிக்குடிப்பட்டி, அரையக்கண்மாய் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர், புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் விவசாய பாசனதாரர்களின் பங்களிப்புடன் போர்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார்.