முன்னாள் சிறைவாசியின் வாழ்வாதாரத்துக்கு வங்கிகள் கை விரித்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உதவிக்கரம் நீட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், மேலவெள்ளமடம் பகுதியை சேர்ந்த வேதமணி என்பவர் குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி 17 வருடங்களாக சிறையில் இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நன்னடத்தையின் மூலம் விடுதலையானதும் எலக்ட்ரிக்கல் சர்வீஸ் மையம் தொடங்க 1 லட்சம் ரூபாய் கடனுதவி கேட்டு மனு அளித்தார். கடந்த கால பிண்ணனி காரணமாக வங்கிகள் இவரது கடனுதவி விண்ணப்பத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆட்சியரின் விருப்ப நிதியின் கீழ் 1 லட்சம் ரூபாய் வழங்க ஆவண செய்தார். இதனையடுத்து தொழிலை தொடங்கிய வேதமணிக்கு அரசின் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அலமாரிகள், மேஜைகளை நன்கொடையாக வழங்கப்பட்டது. வாழ்வாதாரம் இன்றி தவித்த தனக்கு உதவிக்கரம் செய்த ஆட்சியருக்கு வேதமணி நன்றி தெரிவித்துக்கொண்டார்