நீலகிரியில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்

நீலகிரியில் மாவட்ட ஆட்சி தலைவர் துப்புரவு பணியில் ஈடுபட்டு, தொழிலாளர்களுடன் சேர்ந்து சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். நீலகிரி மாவட்டத்தை தூய்மையாக வைக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, உதகை, குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய இடங்களிலில் பேருந்து நிலையங்கள் மற்றும் சந்தைப் பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே அதனை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா, கோத்தகிரி பேருந்து நிலையத்தில் ஊழியர்களுடன் சேர்ந்து துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டார். இதையடுத்து சுற்றுச்சூழல் உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் நகராட்சி தொழிலாளர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்டார். அப்போது பொது இடங்களில் எச்சில் துப்பிய நபர்கள் மீது 1000 ரூபாய் அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.

Exit mobile version