தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் விநியோகம்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் விநியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, 2019 – 2022ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் விநியோகம் தொடங்கியது. இந்த வேட்பு மனுக்கள் வரும் 10ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளது. வரும் 8ம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் எனவும், அதன் மீதான பரிசீலனை 14ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version