அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி புத்தகங்கள் விநியோகம்!!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் பணியை, வரும்14ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாக, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈ-பாஸ் (e-pass) என்ற நிறுவனத்துடன் இணைந்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது என்றும், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் கூறினார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வீடு வீடாக சென்று புத்தகங்களை விநியோகிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அரசுப்பள்ளிகளில் அடுத்த ஆண்டு கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். மாணவர்கள் தங்களுக்கு தேவையான பாடபுத்தகங்களை மடிக்கணினிகளில் பதவிறக்கம் செய்யும் வசதியை தமிழக அரசு தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். வரும் 17ம் தேதி ஈரோடு செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Exit mobile version