அதிமுக வேட்பாளர் ஒப்புதல் படிவம் விநியோகிக்கும் பணி தொடங்கி உள்ளது!

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளரை கட்சியின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன், வேட்பாளரின் பெயரை குறிப்பிட்டு ஒரு சுற்றறிக்கை மூலம் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு வாக்குகளை பெற்று, அதன் முழு விபர அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக்கழக செயலாளர்கள், பிற அணி செயலாளர்கள் ஆதரவு கையொப்பமிட்ட அறிக்கையை, அவைத்தலைவர், தேர்தல் ஆணையத்தில் சமர்பிப்பார் என்றும், அதன் அடிப்படையில் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் அதிமுகவில் உள்ள 2 ஆயிரத்து 539 பொதுக்குழு உறுப்பினர்கள், 70 மாவட்ட செயலாளர்கள், 755 பிற அணி செயலாளர்கள், 61 சட்டமன்ற உறுப்பினர்கள், 3 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒப்புதல் படிவங்கள் நேரடியாகவும், மின்னஞ்சல் மற்றும் பேக்ஸ் மூலமாகவும் வழங்கப்பட்டுள்ளன. இதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக கையொப்பமிட்ட படிவம் அனைவரிடமிருந்தும் பெறப்பட்டு, அது மீண்டும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

Exit mobile version