கர்நாடகாவில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்: 10 பேர் தகுதி நீக்கம்?

கர்நாடகாவில் அதிருப்தியில் உள்ள 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தள அரசுக்கு எதிராக 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் 4 மதச்சார்ப்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதில் 11காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்வற்கான கடிதம் அளித்துள்ளனர். ஒரு எம்எல்ஏ பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 10 பேரைத் தகுதி நீக்கம் செய்ய காங்கிரசின் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version