முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேலூரில் 200க்கும் மேற்பட்ட திமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் மற்றும் திமுகவை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே திமுகவை சேர்ந்த வேலூர் சட்டமன்ற உறுப்பினரின் சகோதரர் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், முதல்வரின் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இதுவரை வேலூரில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திமுக தலைவர் ஸ்டாலினின் நடவடிக்கைகள் பிடிக்காமல், அதிமுகவில் இணைந்துள்ளதாக புதிதாக சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் வேலூரில் அதிமுகவின் தேர்தல் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.