வழிப்பாதை தொடர்பாக தகராறு -தட்டிக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

ஈரோடு மாவட்டம் பவானி அருகே வழிப்பாதை தொடர்பான பிரச்சனையில், ஒருவரின் கையை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புன்னம் சேத்துனாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மளிகைக் கடைக்கு அரிசி மூட்டைகளை இறக்குவதற்காக லாரி வந்துள்ளது. அப்போது வழியை மறித்து லாரி நிற்பது குறித்து கிருஷ்ணமூர்த்தி என்பவர் சீனிவாசனிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், மறுநாள் இருசக்கரவாகத்தில் வந்த மளிகைக் கடைக்காரர் சீனிவாசனை, கிருஷ்ண மூர்த்தியின் உறவினர் அய்யண்ணன் தாக்கியுள்ளார். இதனை தடுக்க முயன்ற சீனிவாசனின் சகோதரர் பரந்தாமனின் கையில், அய்யண்ணன் அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் இருதரப்பினரைச் சேர்ந்த 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version