அவதார் ஐந்தாம் பாகம் வரை ரிலீஸ் தேதி ரெடி- இன்ப அதிர்ச்சியளித்த டிஸ்னி

உலக அளவிலான சினிமாவின் வசூல் சாதனையில் இன்றுவரை அசைக்க முடியாத திரைப்படமாக உள்ளது அவதார். 2009ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தின் அடுத்த பாகம் வெளியாகாதா என ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு பெரும் வெற்றிப் பெற்றது அதன் முதல் பாகம்.

ஆனால் செஞ்சூரி ஃபாக்ஸ் நிறுவனத்தை டிஸ்னி நிறுவனம் வாங்கிய பிறகு, அதன் தயாரிப்பில் தற்போது இருந்த மற்ற படங்களும் நேரடியாக டிஸ்னியின் கைக்கு வந்து விட்டது. அதில் முக்கியமான படம் ஜேம்ஸ் கேமரூனின் “அவதார்”.அதேசமயம் அவதார் 2ம் பாகம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் அவதார் படத்தின் அடுத்த பாகங்களுக்கான படப்பிடிப்பு ஆரம்பமாகி அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அவதார் முதல் பாகத்தை விநியோகித்த செஞ்சூரி ஃபாக்ஸ் நிறுவனம், அதன் அடுத்த பாகங்களை தயாரிக்க ஜேம்ஸ் கேமரானுடன் ஒப்பந்தம் போட்டிருந்தது. ஆனால் டிஸ்னி நிறுவனம் செஞ்சூரியை கையகப்படுத்தியதைத் தொடர்ந்து அனைத்து கட்டுபாடுகளும் டிஸ்னியின் வந்து விட்டது.

இதற்கிடையில் அவதார் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் விதமாக அவதார் ஐந்தாம்  பாகம் வரையிலான படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது டிஸ்னி நிறுவனம்.

மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அவதார் படம், ஒரு ஸ்டார் வார்ஸ் படம், ஒரு டிஸ்னி படம் என 2027 ஆம் ஆண்டு வரையிலான அட்டவணையை வெளியிட்டு உலக சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது டிஸ்னி நிறுவனம்.

Exit mobile version