டிஜிபி ராஜேந்திரனை பணியிட மாற்றம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி

டிஜிபி ராஜேந்திரனை பணியிட மாற்றம் செய்யக்கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக டிஜிபியாக ராஜேந்திரன் 2 வருட பணி நீட்டிப்பில் உள்ளார். இந்நிலையில் அவரை பணியிடமாற்றம் செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்புக்கு தடைவிதிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் டிஜிபி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கே உண்டு எனவும் தெரிவித்துள்ளனர். மனுதாரர் இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்று கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

Exit mobile version