மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து மாநில இலக்கிய அணி செயலாளர் வளர்மதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக இலக்கிய அணி சார்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்
பிறந்தநாளன்று ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு பாராட்டு, நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற “நாற்பது நமதே” என்ற கொள்கையோடு வெற்றிப்பெற உழைக்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.