புதிய முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கை குறித்து மாநாட்டில் விவாதம்!

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும், ஒளிரும் தமிழ்நாடு என்ற காணொலி மாநாட்டினை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைத்து, தலைமையுரை ஆற்றுகிறார். சி.ஐ.ஐ எனப்படும் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் “ஒளிரும் தமிழ்நாடு”  என்ற காணொலி மாநாடு, நாளை காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில், பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இந்த மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்து தலைமையுரை ஆற்றுகிறார். மேலும், தமிழ்நாட்டின் தொழில்வளம் பற்றிய கையேட்டையும் வெளியிடுகிறார். 500க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். சி.ஐ.ஐ தலைவர் ஹரி மு. தியாகராஜன், முன்னாள் தலைவர்கள் தினேஷ், சந்தானம், அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி, சன்மார் குழுமத்தின் துணைத் தலைவர் விஜய் சங்கர், வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்ரீவத்ஸ் ராம், டெய்ம்லர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சத்யகம் ஆர்யா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Exit mobile version