கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
வரும் மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெற உள்ளது. கச்சத்தீவு திருவிழாவிற்கு தமிழக பக்தர்கள் செல்வதற்கு பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்த கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.