சிவகங்கை மாவட்டம் அகரம் கிராமத்தில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளில் பழங்காலத்து மண்பானை போன்ற அமைப்புடைய இரண்டு பானைகள் கண்டறியப்பட்டுள்ளன.
திருப்புவனம் தாலுகாவிற்கு உட்பட்ட கொந்தகை, கீழடி, மணலூர், அகரம் ஆகிய பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணியின்போது, அகரம் கிராமத்தில் சுடுமண்ணால் தயார் செய்யப்பட்ட பழங்கால மண் பானைகள் கிடைத்துள்ளன. அங்கு ஏற்கனவே நிறைய பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் முதல் முறையாக முழு வடிவிலான பானை தற்போது கண்டறியப்பட்டுள்ளது. வட்ட வடிவிலான பானை போன்ற அமைப்புடைய இந்த இரண்டு மண் பானைகளையும் முழுவதுமாக எடுப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.