பிரான்சில் டைனோசரின் ராட்சத தொடை எலும்பு கண்டுபிடிப்பு

பிரான்ஸில் 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் ராட்சத தொடை எலும்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஏஞ்சியாக்- சரன்டீ (Angeac-Charente) பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த 40க்கு மேற்பட்ட உயினங்களின் படிமங்களை கண்டுபிடித்துள்ள நிலையில், மண்ணுக்குள் புதைந்து கிடந்த 2 மீட்டர் நீளம் கொண்ட ராட்சத தொடை எலும்பு கண்டுபிடிக்கப்பட்டது. இது 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தாவர உண்ணும் வகை டைனோசர்களின் எலும்பு எனவும் இந்த டைனோசருக்கு நீண்ட கழுத்து மற்றும் வால் இருந்திருக்கக் கூடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version