மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 2வது நாளாக, மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனையடுத்து, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே உள்ள விதிகளின்படி, அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்த விடுப்பு உள்பட எந்த வகையான வேலை நிறுத்தத்திலும், போராட்டத்திலும் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறினால், சம்பளம் பிடித்தல், ஒழுங்கு நடவடிக்கை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.