மாற்றுத்திறனாளி மாணவி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி

பொள்ளாச்சியை அடுத்த ஆத்துப்பொள்ளாச்சியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், 21 வயது மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

கோவை மாவட்டம்  பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்துப்பொள்ளாச்சியை சேர்ந்த கிட்டான் என்பவரின் மகள் சரண்யா, உடுமலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட காய்ச்சலால் கால்கள் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியானர். இந்நிலையில் சரண்யா ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 8 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு 137 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற சரண்யாவுக்கு அப்பகுதி மக்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version