ரயில்வே இருப்புப்பாதையை ரயில்வே காவல் துறை இயக்குநர் ஆய்வு

அரக்கோணம் ரயில்வே இருப்பு பாதை காவல் நிலையத்தில் ரயில்வே காவல் துறை இயக்குநர் சைலேந்திர பாபு ஆய்வு மேற்கொண்டார்

வேலூர் மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் உள்ள இருப்பு பாதை காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர்களிடம் அவர்களது பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட அறிவுரைகளை வழங்கினார். மேலும் பொதுமக்களுக்கு எந்த இடையூறுமில்லாமல் உதவும் மனப்பான்மை உடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர் காவல் நிலையத்தில் செயல்பட்டு வரும் நண்பன் செயலி குறித்து காவலர்களுக்கு எடுத்துரைத்தார்.

Exit mobile version