பஸ் டே கொண்டாடும் மாணவர்களை கண்காணிக்க உத்தரவு

சென்னையில் பஸ் டே கொண்டாட்டத்தை கண்காணிக்க மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் பிரபல கல்லூரிகளான மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, புதுக் கல்லூரி, நந்தனம் உள்ளிட்ட கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த திங்கள் கிழமை கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் பஸ் டே கொண்டாட்டம் என்ற பெயரில் மாணவர்கள் பேருந்தின் கூரை மீது ஏறி பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் வேதனையை ஏற்படுத்தியதோடு, முகம் சுளிக்கும் விதங்களில் நடந்து கொண்டனர். பேருந்து கூரை மீது இருந்து கொத்தாக 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் கீழே விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து கல்லூரிகள் அமைந்துள்ள பகுதியில் செல்லக் கூடிய பேருந்துகள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் வரக்கூடிய நேரங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். சிசிடிவி மூலமாகவும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Exit mobile version