திருவாரூர் மாவட்டத்தில், ஈரப்பதம் வித்தியாசம் காட்டி நெல் கொள்முதல் செய்யப்படாததால், 8 ஆயிரம் நெல்மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி அறுவடை 70 சதவிகிதம் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக அங்கு மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், விவசாயிகள் கொண்டும் வரும் நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதாக கூறி திருமக்கோட்டை அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் கொண்டு வரும் நெல் தஞ்சை மாவட்டத்தினுடைய நெல் எனக் கூறி கொள்முதலை நிராகரிப்பதாகவும் கூறப்படுகிறது.
நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி, கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.