8 தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக இடையே நேரடிப் போட்டி

மக்களவைத் தேர்தலில் 8 தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

தென் சென்னை, காஞ்சிபுரம், நெல்லை, நீலகிரி தொகுதிகளில் அதிமுக, திமுக இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இதேபோன்று திருண்ணாமலை, சேலம், பொள்ளாச்சி, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளிலும் அதிமுக, திமுக இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

அதிமுக, காங்கிரஸ் இடையே 5 தொகுதிகளில் போட்டி ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, கரூர், ஆரணி, தேனி, திருவள்ளூர் (தனி) ஆகிய 5 தொகுதிகளில் அதிமுக, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக போட்டியிடும் 4 தொகுதிகளில் திமுக 2 தொகுதிகளில் போட்டி ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, வட சென்னை ஆகிய தொகுதிகளில் தேமுதிக, திமுக நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

திருச்சி மற்றும் விருதுநகர் தொகுதிகளில் தேமுதிக, காங்கிரஸ் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று, பாமக போட்டியிடும் 7 தொகுதிகளில் 6 தொகுதிகளில் திமுக இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. தருமபுரி, அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் பாமக, திமுக இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று, பாஜக, காங்கிரஸ் இடையே 2 தொகுதிகளில் போட்டி ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

சிதம்பரம் (தனி) தொகுதியில் அதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையேயும், விழுப்புரத்தில் பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையேயும், தூத்துக்குடி தொகுதியில் பாஜக, திமுக இடையேயும் போட்டி ஏற்பட்டுள்ளது. வேலூரில் திமுக, புதிய நீதிக்கட்சி இடையேயும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஈரோடு தொகுதியில் அதிமுக, மதிமுக இடையேயும், நாகை, திருப்பூர் தொகுதியில் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையேயும், மதுரை தொகுதியில் அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையேயும் போட்டி ஏற்பட்டுள்ளது. தஞ்சையில் திமுக, த.மா.கா. இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

Exit mobile version