பொள்ளாச்சியில் இரு சக்கர வாகனங்களை திருடிச் சென்ற டிப்டாப் ஆசாமி

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவரின் இருசக்கர வாகனம், தனியார் மருத்துவமனைக்கு அருகே திருட்டு போனது. இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல் துறையினர் மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, டிப்டாப்பாக வந்த  மர்ம ஆசாமி ஒருவர் இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது. இதனையடுத்து, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 

Exit mobile version