மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.48 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் உதவிகள் – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்

மாற்றுத்திறனாளிகளை அனைவரும் அங்கீகரிக்கும் வகையில் தமிழக அரசு, திட்டங்களை செயல்படுத்தி வருவதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன உபகரணங்கள் மற்றும் மாதாந்திர உதவித்தெகை பெறுவதற்கான ஆணையினை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், மாற்றுத் திறனாளிகளை மனித சமுதாயத்தின் ஒரு அங்கமாக அனைவரும் அங்கீகரிக்கும் வகையிலும் நாட்டின் வளர்ச்சியில் மாற்றுத் திறனாளிகளின் பங்கேற்பினை உறுதி செய்யும் வகையிலும் தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார்.

இந்த விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, கண்பார்வையற்றவர்களுக்கு பிரெய்லி கடிகாரம், காதொலி கருவி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

 

 

Exit mobile version