திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்றுவரும் மாசித் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம் தென்னகத்தில் புகழ்பெற்ற நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி இன்று வேல் குத்தியும், தீச்சட்டி எடுத்தும் , காவடி எடுத்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் மாலை நடைபெற உள்ள பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.