காய்கறிகள் சாகுபடியில் முன்னிலை வகிக்கும் திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு கத்தரிக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காய்கறிகள் சாகுபடியில் முன்னிலை வகிக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர், பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் ஏராளமான காய்கறி வகைகள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் கத்திரிக்காய் பயிரிடப்பட்டுள்ளது.

எதிர்பார்த்த அளவு மழைப்பொழிவு இல்லாத போதிலும், ஆழ்துளை கிணற்றுப் பாசனம் மூலமாக ஏராளமான விவசாயிகள் கத்திரிக்காய் சாகுபடி செய்துள்ளனர். எதிர்பார்த்ததை விட கத்தரி விளைச்சல் அமோகமாக உள்ளதாகவும், ஆனால், எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ள விவசாயிகள், காய்கறி பயிர்களுக்கு அரசு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version