திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில், வெள்ளத்தை பார்வையிட்ட திமுக அமைச்சர், விளைநில பாதிப்புகளை கண்டுகொள்ளவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
10 நாட்களாக பெய்த தொடர் மழையினால், சட்டையப்பனூர் கிராமத்தில் விவசாயிகள் பயிரிட்டுள்ள வெங்காயம், பீட்ரூட், மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் அனைத்தும், அழுகி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஏக்கருக்கு 40ஆயிரம் ரூபாய் செலவிட்டுள்ள நிலையில் முழுமையாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாககவும் கவலையுடன் கூறினர். வெள்ளத்தைப் பார்வையிட்ட திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி, ஆட்சியர் உள்ளிட்டோர் விளைநிலப் பாதிப்புகளை பார்வையிடவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். முறையாக பயிர் சேதத்தை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.