திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் தயாரிக்கப்படும் காட்டன் புடவைகள் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. காந்தி கிராமத்தில் காட்டன் புடவைகள் தயாரிப்பதற்காக ராட்சத ராட்டை அமைக்கப்பட்டுள்ளது. மாதுளை ஓடு, இண்டிகோ, பிரியாணி இலை போன்ற இயற்கை பொருட்களை கொண்டு புடவைகளுக்கு சாயம் ஏற்றப்படுகின்றன. இதனால் துவைக்கும் போது புடவைகளில் சாயம் வெளுப்பதில்லை.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும், பல்வேறு உலக நாடுகளுக்கும் இந்தப் புடவைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. புடவையின் நிறம் மற்றும் வடிவமைப்பிற்காக பல முறை மத்திய மாநில அரசுகளின் விருதை உற்பத்தியாளர்களான நெசவாளர்களும், காந்தி கிராம அறக்கட்டளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.