திண்டுக்கல்லில் உள்ள ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

கார்த்திகை மாதம் இன்று தொடங்கியதை அடுத்து திண்டுக்கல்லில் உள்ள ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

சபரிமலையில் கார்த்திகை மாதத்திற்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் மண்டல பூஜை, மகரஜோதி செல்ல ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்கள் இன்று மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினர். திண்டுக்கல் மலையடிவாரம் வட்டார ஐய்யப்பன் கோயிலில் அதிகாலையிலேயே பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி மாலை அணிந்து கொண்டனர்.

முன்னதாக அதிகாலையில் கொடியேற்றப்பட்டு கணபதி பூஜை துவங்கியது. கொரோனா தொற்று பரவலால் சபரிமலை செல்ல பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் , மாலை அணிந்து கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை திண்டுகல்லில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

60 வயதிற்கு மேல் உள்ள பக்தர்களுக்கு சபரிமலையில் அனுமதி இல்லை என்பதால் அங்கு செல்ல முடியாத பக்தர்கள் தங்கள் விரதத்தை பூர்த்தி செய்து நெய் அபிஷேகம் செய்து கொள்ள கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

Exit mobile version