அதிமுகவைச் சேர்ந்த தன்னை, திமுக காரர் என தவறாக செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ், வருத்தம் தெரிவித்து, மறுப்பு செய்தி வெளியிடவில்லை எனில், சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாக கொட்டக்குடி ஊராட்சிமன்றத் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேனி மாவட்டம் குரங்கணி அருகேயுள்ள கொட்டகுடி ஊராட்சிக்கு, ராஜேந்திரன் என்பவர் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜேந்திரன் அதிமுகவைச் சேர்ந்தவர். ஆனால், அவரை திமுக உறுப்பினர் என்று தினமலர் நாளிதழ் தவறாக செய்தி வெளியிட்டது.
தான் திமுகவை சேர்ந்தவன் என்று தவறாக செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழ், தன்னிடம் வருத்தம் தெரிவித்து, மறுப்பு செய்தி வெளியிடவில்லை என்றால், அந்த நாளிதழ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாக, கொட்டகுடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.