அதிமுகவினர் வாகனத்தில் கல்லெறிந்த தினகரன் ஆதரவாளர்கள்

சென்னை பெரம்பூரில் தினகரன் ஆதரவாளர்கள் அதிமுக பிரசார வாகனத்தின் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக ஆர்.எஸ்.ராஜேஸ் போட்டியிடுகிறார். பெரம்பூர் சர்மா நகர் பகுதியில் அதிமுகவினர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தினகரன் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் வெற்றிவேலின் ஆதரவாளர்கள், அதிமுகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதிமுகவினரின் பிரசார வாகனத்தின் மீது கல்லெறிந்து தாக்கினர். இதில் ஒரு ஆட்டோவின் கண்ணாடி உடைந்தது. திமுகவினர் மீது தினகரன் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தவும் முயன்றனர். பின்னர் அங்கே வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.

Exit mobile version