காலியாகும் தினகரன் கூடாரம் – அடுத்த விக்கெட் செந்தில் பாலாஜி

 

கரூர் தொகுதியை சேர்ந்த செந்தில் பாலாஜி அதிமுகவில் பல வருடங்களாகவே இருக்கிறார். அம்மா முதலமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர். இப்போது தினகரன் கூடாரத்தில் செல்வாக்கற்று இருக்கிறார்.தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.

18 எம்எல்ஏக்கள் தொடர்பான தீர்ப்பு வந்ததில் இருந்தே தினகரன் பக்கம் இருக்கும் எம்எல்ஏக்கல் அதிருப்தியுடன் காணப்பட்டனர்.பதவியும் இல்லாமல் அதிகாரமும் இல்லாமல் வெறும் கைப்பாவைகளாக எத்தனை மாதம் தான் அவர்களால் இருக்க முடியும். ஆகையால் இனி தினகரனிடம் இருப்பது தங்களின் எதிர்கால அரசியல் வாழ்வுக்கு சரியாக இருக்காது என்று பல எம்ஏல்ஏக்கள் எண்ணுகின்றனர். அதன் விளைவு தான் செந்தில் பாலாஜி திமுகவில் சேர இருக்கிறார் என்ற தகவல்.

ஏன் செந்தில் பாலாஜி திமுகவில் சேர வேண்டும்?

தற்போது தினகரனிடம் உள்ள செந்தில்பாலாஜி 2016 ஆம் ஆண்டிலிருந்து கட்சி மற்றும் கூட்டங்களுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்திருக்கிறார். ஆனால் அமமுக கட்சியின் பல்வேறு முடிவுகளை செந்தில்பாலாஜியிடம் கேட்காமல் தினகரன் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மேலும் தினகரனுடன் இருக்கும் 18 எம்எல்ஏக்களும் தங்களுடைய தேர்தலில் இடைத் தேர்தல் வந்தால் அவர்களே செலவு வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. பதவியும் இல்லை, மக்களிடம் மரியாதையும் இல்லை. ஆகையால் இனிமேலும் இங்கிருந்தால் தனக்கு செல்வாக்கு இருக்காது என்று நினைத்து தான் செந்தில் பாலாஜி திமுகவில் சேர இருக்கிறார். திமுகவுக்கு செந்தில் பாலாஜி போகும் தகவலை அவரும் மறுக்கவில்லை. தினகரனும் இது குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை.

தொண்டர்களிடம் கருத்து கேட்ட செந்தில் பாலாஜி

தான் திமுகவில் சேர இருப்பது குறித்து தொண்டர்களிடமும் கருத்து கேட்டுள்ளார். இது குறித்து தொண்டர்களிடம் பேசிய அவர், திமுகவில் தான் சேர்ந்தால் தனக்கு மாவட்ட செயலாளர் பதவி தருவார்கள் என்றும், அடுத்த தேர்தலில் ஜெயித்தால் அமைச்சர் பதவி தருவேன் என்று திமுக தரப்பில் கூறியிருக்கிறார்கள். எனக்காக மட்டும் நான் பேசவில்லை உங்களுக்காகவும் தான் பேசி இருக்கிறேன். நீங்கள் என்னோடு வந்தால் இப்போது என்ன பதவியில் இருக்கிறீர்களோ அதே பதவியை திமுகவில் வாங்கி தருகிறேன் என்று தொண்டர்களிடம் சொல்லி இருக்கிறார். தொண்டர்களும் இதை ஆமோதித்துள்ளதாக தெரிகிறது.
கரூரில் செந்தில் பாலாஜியை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் சின்னசாமி அவருடைய நண்பர்களிடம்
செந்தில் பாலாஜிக்கு எதிராக இனி எதையும் செய்ய வேண்டாம் என்று சொல்லி இருப்பதாவும் தெரிகிறது.

அதிமுகவிற்கு வருவதற்கு முன்பு திமுகவில் தான் இருந்தார் செந்தில் பாலாஜி. அவர் அதிமுகவில் இருந்தாலும் திமுகவை சேர்ந்த பலரும் அவருடன் நட்புடன் தான் இருந்து வந்துள்ளனர். இதைப்பயன்படுத்தி தான் மீண்டும் செந்தில் பாலாஜி திமுகவில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே தினகரனின் கூடாரத்தில் இருந்து கிளம்புகிறார் செந்தில்பாலாஜி. மற்ற எம்எல்ஏக்களும் இது குறித்து யோசித்து கொண்டிருப்பதால் தினகரன் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதனால் எம்எல்ஏக்களை தக்க வைக்க தினகரனால் முடியவில்லை என்பது கண் கூடாக தெரிகிறது.

 

Exit mobile version