கடந்த மாதம் தொடங்கிய டிஜிகாப் வெர்சன் -1 செயலியை 72 ஆயிரத்து 155 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்று, மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் டிஜிகாப் வெர்சன்-2 செல்போன் செயலியை மாநகர காவAல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ஒருமாத்ததுக்கு முன்பு டிஜிகாப் வெர்சன் -1 செயலியை தொடங்கியதாகவும், இந்த செயலியை பயன்படுத்தி கொள்ளை போன 1, 227 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினார். 33 ஆயிரத்து 839 பேர் இந்த செயலியில் டேட்டா பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த செயலி மூலம் பொதுமக்கள் நேரம் விரயம் செய்யாமல் துரிதமாக புகார் அளிக்க முடியும் என்றார்.