சேலத்தில் வாழைப்பழத்தாரில் ஒரு சீப்பில் மட்டும் செவ்வாழை, சந்தனவாழை என வித்தியாசமாக விளைந்துள்ளது பலரை ஆச்சரியமடையச் செய்துள்ளது.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே கடைவீதி பகுதியில் பழங்கள் மொத்த விற்பனை நிலையங்கள் உள்ளன. இங்குள்ள சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான பழ மண்டிக்கு கருமந்துறை பகுதியில் இருந்து விற்பனைக்கு வந்த ஒரு சந்தன வாழை பழத்தாரில், ஒரு சீப்பு வாழைப்பழம் மட்டும் வித்தியாசமாக இருந்தது. காயாக வந்த வாழைத் தாரை பழுக்க வைத்த பின்னர், அதன் நிறம் வித்தியாசமாக மாறியுள்ளது. சந்தன வாழைப்பழ சீப்பில் இருந்த 7 பழங்கள் செவ்வாழையாகவும் அதில் ஒரு பழம் பாதி செவ்வாழை, பாதி சந்தன வாழையாகவும் இருந்ததை கண்டு ஆச்சர்யமடைந்தார்.