உலகக்கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடுவது இன்னும் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் முன்னாள் இந்திய அணியின் வீரர்கள் ட்விட்டரில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சச்சின் டெண்டுல்கர்
“உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியா பாகிஸ்தானிற்கு எதிராக வென்றுதான் வருகிறது. அவர்களை வீழ்த்த மீண்டும் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. வரும் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானிற்கு 2 புள்ளிகளை இலவசமாக தர வேண்டாம் என்று எண்ணுகிறேன். ஆனால் இந்திய நாடு என்று வரும் போது, நாடு எடுக்கும் முடிவினை நான் மனதார ஏற்கிறேன் “.
சுனில் கவாஸ்கர்
“இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடினால் இந்தியா தான் வெற்றி பெறும்… ஆனால், நாம் விளையாடாமல் போனால், பாகிஸ்தான் வெற்றி பெறும், இந்திய அரசு என்ன முடிவு செய்தாலும் அதற்கு கட்டுப்படுகிறேன்…. “.
ஹர்பஜன் சிங்
“தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாட கூடாது… “.
முகமது ஆசாருதீன்
“நாட்டை விட உலக கோப்பை முக்கியம் அல்ல”.
சவுரவ் கங்குலி
“எல்லா வித விளையாட்டுகளிலும் பாகிஸ்தானுடன் விளையாட கூடாது…”
சோயிப் அக்தர்
பாகிஸ்தான் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் “இந்தியாவிற்கு எல்லா உரிமையும் உண்டு… உலக கோப்பையில் விளையாடுவது குறித்து அவர்கள் முடிவு செய்யட்டும்..” என்று கூறியுள்ளார்.
அப்ரிடி
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் “ஆதாரம் இல்லாமல் பாகிஸ்தானை குறைசொல்ல கூடாது… இந்திய அணி பாகிஸ்தானுடன் மோத வேண்டும்…” என்று கூறியுள்ளார்.