2 -வது நாளாக குறைந்தது டீசல் விலை

தமிழகத்தில் ஒரு மாதத்துக்குப் பின் தொடர்ந்து இரண்டாவது நாளாக டீசல் விலை குறைந்துள்ளது.

நாடு முழுவதும், கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்தது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியது. இந்த நிலையில், தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல், 99 ரூபாய் 47 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே கடந்த ஒரு மாதமாக விலை ஏற்றம் இல்லாமல் இருந்த டீசல் விலை, நேற்று லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து, 94 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று டீசல் லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து 94 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

 

Exit mobile version