மனங்களைக் கொள்ளைக் கொண்ட துருவ நட்சத்திரத்தின் `ஒரு மனம்’ பாடல் வீடியோ!

துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ”ஒரு மனம்” பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா மற்றும் பலர் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம். ஸ்பை த்ரில்லர் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

நீண்ட நாட்களாக ரிலீஸாகாமல் இருக்கும் இப்படத்திலிருந்து ஒரு மனம் என்ற வீடியோ பாடலை வெளியிட்டுள்ளனர். கௌதம் மேனன் படங்களின் ட்ரேட்மார்க் காம்போவாக இருக்கும் ஹாரிஸ்-தாமரை கூட்டணியில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Exit mobile version