தோனி பிறந்தநாள்: ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்

2004ம் ஆண்டு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. அவரது ஸ்டைல், அதிரடியான ஆட்டம், களத்தில் கடைபிடிக்கும் தலைமைக்கான பண்பு என பல வகைகளில் தனக்கு பின்னால் ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.

அவர் வாங்காத கோப்பைகள் இல்லை…அவர் பெறாத வெற்றிகள் இல்லை..ஐபிஎல் கிரிக்கெட்டிலும் அவர் கேப்டனாக பல சாதனைகள் புரிந்துள்ளார். குறிப்பாக சென்னையின் அணியின் கேப்டனாக இருந்த அவருக்கு அதன்மூலம் தமிழ்நாட்டோடு ஒரு அன்பான தொடர்பும்  இருந்தது.

இந்நிலையில் தோனி இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் உட்பட பல தரப்பினர் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை பறிமாறி வருகின்றனர்.

குறிப்பாக தோனி பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் #HappyBirthdayDhoni, #MSDhoni,#HappyBirthdayMSD, #MSD38 என்ற ஹேஸ்டேக் மூலமாக ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஸ்டேக்குகள் ட்விட்டரில் முதல் 4 நான்கு இடங்களை பிடித்துள்ளது.

 

 

 

 

Exit mobile version