நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இருபது ஓவர் போட்டியில் விளையாடியதன் மூலம், 300 இருபது ஓவர் போட்டிகளில் பங்கேற்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை மகேந்திரசிங் தோனி பெற்றார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி ஹாமில்டனில் நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய விக்கெட் கீப்பர் மகேந்திரசிங் தோனிக்கு இது 300-வது போட்டியாகும். இதன் மூலம் இந்திய வீரர்களில் அதிகபட்சமாக 20 ஓவர் போட்டிகளில் 300 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சிறப்பை பெற்றார். 24 அரைசதங்களுடன் 6 ஆயிரத்து 136 ரன்கள் குவித்துள்ள தோனிக்கு அடுத்த இடத்தில் 298 போட்டிகளில் விளையாடிய ரோஹித் ஷர்மா உள்ளார்.
உலக அளவில் அதிக 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்ற 13 வீரர் என்ற சிறப்பை இங்கிலாந்தின் லூக் ரைட்டுடன் பகிர்ந்துள்ளார். இந்த வகையில், மேற்கிந்திய தீவுகள் வீரர் கிரான் பொல்லார்ட் சர்வதேச அளவில் 446 போட்டிகளில் பங்கேற்று முதலிடத்தில் உள்ளார்.