“ஐபிஎல் Play Off Qualifier 1-ல் டோனி டாஸ் வென்றால் என்ன செய்வார் என்பதை விளக்கத்துடன் பதிலளிக்கவும்” என்று IIT Madras, semester exam-ல் (மே 6ந் தேதி – அதாவது Play Off போட்டிக்கு முந்தைய நாள்) கேள்வி கேட்கப்பட்டது. IIT பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன் தயாரித்த இந்த வினாத்தாளில் “சென்னையில் இரவு ஆட்டத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். அதனால், பந்து சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும். வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் சரியான வேகத்தில் பந்துவீச முடியாமல் போகும் . ஐபிஎல் Play Off Qualifier 1-ல் டோனி டாஸ் வென்றதும் என்ன முடிவெடுப்பார் என்பதை தெளிவான விளக்கத்துடன் பதிலளிக்கவும்” என்று கேள்வி கேட்கப்பட்டது. இதனை ஐசிசி தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Shout out to Professor Vignesh at @iitmadras for making exams relevant to important, real-life issues!
Can anyone help @msdhoni and @ChennaiIPL make a decision before the toss tomorrow? (and show your workings ?) pic.twitter.com/8fp7rGI5BG
— ICC (@ICC) May 6, 2019