திமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் சபாநாயகர் முன்னிலையில் தரம் குறைவாக பேசியதால் அவையில் இருந்த உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்தனர்.
விஞ்ஞான ஊழல் மற்றும் அடிதடிக்கு பெயர் போன கட்சி திமுக என்பது மக்கள் அறிந்த ஒன்று. இந்த நிலையில் அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன், நாடாளுமன்றத்தில் எப்படி பேசுவதென்றே தெரியாமல் உளறி கொட்டியதால் சபாநாயகர் முன்னிலையில் மற்ற அமைச்சர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தயாநிதிமாறனின் பேச்சு சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளதாகவும், ஊழலுக்காக ஆட்சியை இழந்த கட்சி தான் திமுக எனவும் குற்றம் சாட்டினார்.