கேரள மாநில ஆரியங்காவு தர்ம சாஸ்தா சுவாமிக்கும் புஷ்பகலா தேவிக்கும் நடைபெற்ற நிச்சயதார்த்ததில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்…
சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது முதல் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலிலும் திருவிழா நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், ஆரியங்காவு தர்ம சாஸ்தா ஐயப்பன் சுவாமிக்கும், மதுரையை சேர்ந்த புஷ்பகலா தேவிக்கும் நடைபெற்ற நிச்சயதார்த்தம் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மாலையில் தாலிப்பொலி ஊர்வலம் எனும் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடக்க உள்ளது. இதில் மாம்பழத்துறை பகவதி அம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பெண்கள் தீபத்தை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். இதில் பெண் வீட்டாராக மதுரையை சேர்ந்த சௌராஷ்ட்ர சமூகத்தினரும், மாப்பிள்ளை வீட்டாராக கேரள தேவசம் போர்ட்டு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த திருக்கல்யாணம் இன்று இரவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.