தருமபுரி மாவட்டம் அரூர் அருகே வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கிய நிலையில், அவ்வழியாக ஆபத்தான நிலையில் வாகனங்கள் கடந்து செல்கின்றன.
மாவட்டத்தில் பரவலாக பெய்த கன மழையால் அங்குள்ள ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. அரூரை அடுத்த செல்லம்பட்டி ஏரிக்கு வரும் கால்வாயை பொதுப்பணித்துறையினர் முறையாக தூர் வராததால் தண்ணீர் ஆற்றங்கரையோரம் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்துள்ளன.
இதனிடையே அரூரில் இருந்து திருவண்ணாமலை செல்லக்கூடிய நெடுஞ்சாலையின் தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி வெள்ளம் செல்கிறது. தரைப்பாலத்தின் இருபுறமும் மண் அரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஆபத்தான நிலையில் வாகனங்கள் கடந்து செல்வதை தடுக்க மாவட்ட நிர்வாகம நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Discussion about this post