அஜித் பிறந்தநாளில் வெளியாகிறதா தனுஷ் படம் ?

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் அஜித் பிறந்தநாளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட்டாஸ் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ், ராம்குமார் ஆகியோரின் படத்தில் நடித்து வருகின்றார்.

இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் 40வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் தேதியை பிப்ரவரி முதல் வாரத்தில் படக்குழு அறிவிக்க உள்ளது. இந்த படத்தில் சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தை நடிகர் அஜித்தின் பிறந்த நாள் மற்றும் உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version