பழனி முருகன் கோயிலில் வழிபாடு செய்த நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் நடித்து வெளியான அசுரன் மாபெரும் வெற்றியை தொடர்ந்து. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு புதிய  படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து இயக்குநர்  மாரி  செல்வராஜ் இயக்கத்தில்  நடிக்கவுள்ளார். இதனிடையே துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படம் வரும்  ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் தனுஷின் புதிய  படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பழனி அருகே கோம்பைப்பட்டியில்  நடைபெற்று வருகிறது. இதற்காக தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகனுடன் பழனி  தண்டாயுதபாணி முருகன் கோயிலில் வழிபாடு செய்தார்.

சபரிமலைக்குச் செல்வோர், விடுமுறை காலம் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இருப்பினும் கோயில் நிர்வாகத்தினர் தனுஷ் குடும்பத்திற்குச் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

 

Exit mobile version